search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ்"

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் கோப்பையை கைப்பற்றியது. #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெற்றது.
     
    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்கள் விரைவில் புள்ளிகளை குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் பாதி முடிவில் 16 - 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் குஜராத் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர்.



    ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியினர் விஸ்வரூபம் எடுத்தனர். அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக ஆடினார். அவர் 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

    இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 47 - 37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ்அணி. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குஜராத் அணியினர் வீறு கொண்டு ஆடினர். இதனால் அரியானா அணி வீரர்களின் போராட்டம் வீணானது.

    இறுதியில், அரியானா அணியை 47 - 37 என்ற கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 14வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஏ பிரிவில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது. #ProKabaddi #GujaratFortunegiants #HaryanaSteelers
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் அணி. #ProKabaddi #GujaratFortuneGiants #TeluguTitans
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும், முதல் பாதியின் முடிவில் 17 -12 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் போராடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 29 -27 என்ற கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi #GujaratFortuneGiants #TeluguTitans  
    ×